ETV Bharat / state

இபிஎஸ்,ஓபிஎஸ்-ஐ வைத்துக்கொண்டு ஊழல் ஒழிப்பா? - மோடிக்கு ஸ்டாலின் கேள்வி - திமுக தலைவர் ஸ்டாலின்

தென்காசி: பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் பக்கத்தில் வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்போம் என பிரதமர் மோடி பேசி வருவதாக தென்காசி தேர்தல் பரப்புரையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

stalin
stalin
author img

By

Published : Mar 30, 2021, 10:12 PM IST

Updated : Mar 30, 2021, 10:24 PM IST

தென்காசி மாவட்டம் ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோயில் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பாவூர்சத்திரத்தில் தேரதல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, “தமிழகத்தில் பிரதமர் மோடி வழக்கம் போல பொய் பிரசாரத்தை மேற்கொண்டு சென்றுள்ளார். அவர் என்ன பொய் பேசினாலும் இங்கு மோடி மஸ்தான் வேலை எடுபடாது. ஜெயலலிதாவை அரசியலில் இருந்தே ஒழிக்க வேண்டும் என்றவர்தான் இந்த மோடி. தற்போது ஊழல் அரசு நடத்தி வரும், பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் பக்கத்தில் வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்போம் என மோடி பேசுகிறார்.

இந்த பத்தாண்டு கால ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. எனவே மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும்” என்றார்.

இபிஎஸ்,ஓபிஎஸ்-ஐ வைத்துக்கொண்டு ஊழல் ஒழிப்பா? - மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

இதையும் படிங்க: மத்திய அரசுடன் இணக்கம் ஏன்? - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

Last Updated : Mar 30, 2021, 10:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.