தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி இல்ல விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இந்நிகழ்வில் கலந்துகொள்ள வந்த அவருக்கு வழிநெடுக அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்வில் பேசிய முதலமைச்சர், "அதிமுக என்றாலே எம்ஜிஆர், ஜெயலலிதா தான் மனதில் தோன்றுகிறார்கள்.
அவர்கள் செயல்படுத்திய திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அவர்கள் கண்ட கனவை இந்த அரசு நினைவாக்கிவருகிறது. கழகம் என்றாலே குடும்பம். ஒரே குடும்பமாக இருந்து சிறப்பாக கழகத்தில் செயல்படுகிறோம். நாம் அனைவரும் ஒரே அணியாக இருப்பதால் தான், நாம் வலுவாக இருக்கிறோம். ஏழை, எளிய மக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல திட்டங்களைச் செயல்படுத்திவருகிறோம்.
7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டால் அரசுப்பள்ளி மாணவர்கள் 313 பேர் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது. விவசாயத்தை பாதுகாக்க குடிமராமத்துப் பணிகள் மூலம் மழைநீரை சேமித்துவருகிறோம். கல்வி, நீர் மேலாண்மை, தொழில் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு புரட்சி படைத்துவருகிறது" என்றார்.
இந்நிகழ்வில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழ்நாடு அமைச்சர்கள் செல்லூர் ராஜு,தங்கமணி, அன்பழகன், சரோஜா, உதயகுமார், கடம்பூர் ராஜு,காமராஜ்,பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்: பரஸ்பர குற்றச்சாட்டு வைக்கும் திமுக, அதிமுக