ETV Bharat / state

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் - ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி

தென்காசி அருகே ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த நபரின் வீட்டின் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தினர்.

பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்
பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்
author img

By

Published : May 19, 2022, 1:24 PM IST

தென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள டி.ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் வள்ளிநாயகம். ரயில்வேயில் பணியில் இல்லாமலேயே அதில் மேலதிகாரியாக இருந்து வருவதாக அப்பகுதி முழுவதும் கூறியுள்ளார்.

அவரது தோழியான அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்பவருக்கு வேலை வாங்கி தந்ததாகவும் அவரிடம் விசாரித்துக் கொள்ளுங்கள் என்றும் கூறி மற்றவர்களை நம்ப வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழரசியும் தனக்கு வேலை வாங்கித் தந்ததாக அனைவரிடமும் கூறி வந்துள்ளார்.

மோசடி செய்தவர்கள்
மோசடி செய்தவர்கள்

இதனை நம்பி ஒரே கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் 3 கோடி ரூபாய்க்கும் மேல் பணத்தைக் கொடுத்துள்ளனர். பணம் கொடுத்தவர்களுக்கு போலியாக பணி ஆணையை வழங்கி 45 நாட்களுக்குப் பிறகு பயிற்சிக்கு அழைப்பார்கள் என்றும் 90 நாட்களில் பணி அமர்த்தப்படுவீர்கள் என்றும் வள்ளிநாயகம் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்

அது போலி பணி ஆணை என்பதை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கடந்த டிசம்பர் மாதம் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து வள்ளிநாயகம், தமிழரசி, மகேந்திர குமார், முருகன் ஆகிய 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 4 பேரும் 2 மாதத்திற்கு முன்பு ஜாமீனில் வெளியான நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் வள்ளிநாயகத்தின் வீட்டிற்கு முன்பு நின்று பணத்தை தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: பேக்கரி கடை உரிமையாளர் மீது தாக்குதல்: சட்டக்கல்லூரி மாணவன் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.