தென்காசி: சங்கரன்கோவில் அருகே ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் ஆகாஷ் (23) ஹெல்த் இன்ஸ்பெக்டராக தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன்(20). மகேந்திரன் ஐ.டி.ஐ படித்து விட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த வாரம் விடுமுறைக்காக சொந்த ஊரான ராமநாதபுரத்திற்கு வந்தார். ஆகாசும் மகேந்திரனும் சொந்த வேலையாக செங்கோட்டையில் ஒருவரை பார்த்து விட்டு நேற்று முன்தினம் மாலை புளியங்குடி சாலையில் திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிள் புளியங்குடி சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே வரும்போது எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தியாகி இம்மானுவேல் சேகரனின் 65ஆவது குரு பூஜை: தென்காசி மாவட்ட திமுக அலுவலகத்தில் அனுசரிப்பு