தென்காசி: தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு இந்து முன்னணி சார்பில் பிரச்சார பயணம் தொடர்பான பொதுக்கூட்டம் நேற்று (ஜூன் 30) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கூட்டத்தில் உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக அரசு இந்து விரோத அரசாக செயல்பட்டு வருகிறது. அதனை மாற்றிக்கொள்ள வேண்டும். கோயில்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும்.
தனியாக இந்துக்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட வேண்டும். பொது சிவில் சட்டத்தை பொறுத்தவரை அது தேவை என்பதில் இந்து முன்னணி உறுதியாக இருக்கிறது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அச்சுறுத்தல் பல்வேறு பகுதிகளில் இருப்பதால் தமிழக அரசும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடர்ந்த காடு... நீடித்த இருள்...'டோலி' கட்டி 8 கி.மீ. தூரப்பயணத்தில் மருத்துவமனை சென்ற கர்ப்பிணி!