ETV Bharat / state

தென்காசி முப்பெரும் தேவியர் கோயிலில் சிறப்பு பூஜை.. ஏராளமான பக்தர்கள் வழிபாடு! - கார்த்திகை தீபத் திருவிழா

Tenkasi Bhavani amman temple: தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உள்ள முப்பெரும்தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்கத்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Tenkasi
Tenkasi
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 11:09 PM IST

Updated : Nov 27, 2023, 10:56 AM IST

தென்காசி முப்பெரும் தேவியர் கோயிலில் சிறப்பு பூஜை

தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனை அருகே முப்பெரும்தேவியர் ஆலயம் உள்ளது. இங்கு கார்த்திகை மாதத்திலுள்ள பவுர்ணமி பூஜை மற்றும் கார்த்திகை தீப ஒளி திருநாள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு முப்பெரும் தேவியர் கோயிலுக்கு பிற மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்திருந்தனர். இக்கோயிலில் இன்று சிறப்பு நிகழ்ச்சியாக காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை கார்த்திகை மாத பௌர்ணமி பூஜை மற்றும் சிறப்பு அருள்வாக்கு நடைபெற்றது. கார்த்திகை மாத பௌர்ணமி பூஜை குறித்து குருநாதர் சக்தியம்மா ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

இதனைத்தொடர்ந்து முப்பெரும் தேவியர் பவானி அம்மாக்களுக்கு குங்குமம், தயிர், சந்தனம், தேன் உள்பட 21 வகையான நறுமண பொருட்கள் மூலம் அபிஷேகம் நடந்தது. மேலும், பவுர்ணமி பூஜையை முன்னிட்டு 1008 லிட்டர் சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, பரிகார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, பதினெட்டாம்படி கருப்பசாமி, பவானி பத்ரகாளியம்மன், மகாகாளி அம்மன், பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.

பின்னர், முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோயில் முழுவதும் 2008 கார்த்திகை தீப விளக்குகள் ஏற்றப்பட்டது. மேலும், இரவு நேரத்தில் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழா ஏற்பாடுகள் அனைத்தும் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்! "அரோகரா.. அரோகரா.." என பக்தர்கள் முழக்கம்!

Last Updated : Nov 27, 2023, 10:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.