ETV Bharat / state

காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் போராட்டம்

தென்காசி: காவல் துறையினரால் தன் தந்தை தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மகள் மருத்துவமனை குடிநீர் தொட்டியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Breaking News
author img

By

Published : Jun 24, 2021, 6:58 AM IST

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை தெற்கு மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவர் ஜூன் 17ஆம் தேதி ரேஷன் கடையில் 10 கிலோ அரிசி வாங்கிக்கொண்டு தனது உறவினர் வீட்டிற்கு கொண்டுசென்றுள்ளார்.

அப்போது, புளியரை சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், பிரான்சிஸ் கொண்டுசென்ற அரிசியை பறிமுதல்செய்து, மறுநாள் காலை காவல் நிலையத்திற்கு வருமாறு கூறி அனுப்பிவைத்துள்ளனர். காவல் துறையினர் கூறியதுபோல், ஜூன் 18ஆம் தேதி காலை இவர் புளியரை காவல் நிலையம் சென்றுள்ளார்.

செல்போன் டவரில் ஏறி போராட்டம்

அப்போது, அவரிடம் விசாரணை நடத்திய உதவி ஆய்வாளர் முருகேசனும், தனிப்படை காவலரும், காவலர் அல்லாத ஒரு நபரும் சேர்ந்து பிரான்சிஸை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அதில் பலத்த காயமடைந்த பிரான்சிஸ் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது இளைய மகளான அபிதா (25) என்பவர் அரசு மருத்துவமனை அருகிலிருந்த 100 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறி, தனது தந்தையைத் தாக்கிய காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும். இல்லையென்றால் தான் தற்கொலை செய்துகொள்வேன் எனக் கூறினார்.

உடனே தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் அபிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, அவரது தந்தை, உறவினர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர் மேலிருந்து கீழே இறங்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

lந்தையை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகள்கள் போராட்டம்
குழந்தையைத் தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகள்கள் போராட்டம்

மீண்டும் போராட்டம்

இதனைத்தொடர்ந்து, சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமார் ஆறு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ஜூன் 21ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் அவர் கீழே இறங்கினார்.

தொடர்ந்து அவருக்கு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில் அவர் நேற்று (ஜூன் 22) மாலை 4 மணியளவில் செங்கோட்டை அரசு மருத்துவமனையிலுள்ள குடிநீர் தொட்டியில் ஏறி மீண்டும் போராட்டம் நடத்தினார். தொடர்ந்து நடந்த போராட்டம் காரணமாக மூன்று பிரிவின்கீழ் உதவி ஆய்வாளர் முருகேசன், தனிப்பிரிவு காவலர் மஜித் ஆகியோர் மீது புளியரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவமனை கட்டடத்தின் தண்ணீர் தொட்டியில் ஏறி போராட்டம் நடத்திய அபிதாவை தீயணைப்பு மீட்புப்பணித் துறையினர் பாதுகாப்பாக கீழே இறக்கினர். பின்னர், அப்பெண் தனது சகோதரியுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, மகளிர் காவல் துறையினர் சகோதரிகளை அவர்களது வீட்டில் சென்றுவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.