ETV Bharat / state

தென்காசியில் தொடரும் வெறிநாய் அட்டகாசம்; கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் - மக்கள் நிலை என்ன?

author img

By

Published : Aug 4, 2023, 12:38 PM IST

தென்காசி மாவட்டத்தில் தொடரும் வெறிநாய்களின் அட்டகாசத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அதை தடுக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தென்காசியில் தொடரும் வெறிநாய் அட்டகாசம்
தென்காசியில் தொடரும் வெறிநாய் அட்டகாசம்
தென்காசியில் தொடரும் வெறிநாய் அட்டகாசம்

தென்காசி: தொடரும் வெறி நாய்கள் அட்டகாசத்தைக் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தால் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் வெறிநாய்கள் கடித்து பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதே போல் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பும் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நாய்க் கடியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் பலரும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் ஒரு கிராமத்தில் நள்ளிரவில் வேலை பார்த்து வந்த பெண்களையும் சில நாட்களுக்கு முன் வெறிநாய் கடித்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி, பாறைப்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் நாய்கள் தொந்தரவு அதிகமாக இருந்து வருகிறது.

மேலும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இரவு நேரத்தில் வேலைக்குச் சென்று வீடு திரும்பும் பொழுது, 10க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் கடித்து பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. கடந்த முறை இதுபோன்று வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் இது குறித்த புகார் அளித்தும் இதுவரை நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இரவு சிவகாமியாபுரம், மருதகிணறு, ஆராய்ச்சிபட்டி மற்றும் சூரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை வெறிநாய் கடித்து குதறியுள்ளது. இதில் 3 சிறுவர்கள் 8 பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உடல்களில் பல்வேறு இடங்களில் வெறிநாய் கடித்து குதறி உள்ளது.

இதனை தொடர்ந்து வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சிறு சிறு காயங்களுடன் 10க்கும் மேற்பட்டோர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து இவ்வாறு வெறி நாய் கடியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவது பொதுமக்கள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பில் நடவடிக்கை எடுக்க கூறி மனு அளித்தும், தற்போது வரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இருந்தும், சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இருந்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.

மேலும் சங்கரன்கோவில் பகுதியை சுற்றிலும் கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக 50க்கும் மேற்பட்டோர் வெறிநாய் கடித்து பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. தற்பொழுது குருக்கள்பட்டி பகுதியில் சுமார் ஐந்து கிராமத்திற்கு மேல் உள்ள பகுதியில், வெறிநாய் தொடர்ந்து ஒவ்வொரு பகுதியாக சென்று பொது மக்களை கடித்து வருவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தூக்கம் இன்றி இரவு நேரத்தில் தவித்து வருகின்றனர்.

நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் இன்னும் காலம் தாழ்த்தினால் பல விபரீதங்கள் நேரும் எனவும் பொதுமக்கள் அச்சம் கொள்கின்றனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியின் பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க: என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.