ETV Bharat / state

9 மாதங்களுக்குப் பின் குற்றால அருவி திறப்பு: குவியும் சுற்றுலாப் பயணிகள்! - 9 மாதத்திற்கு பின் குற்றால் அருவி திறப்பு

தென்காசி: குற்றால அருவிகளில் குளிக்க ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் அனுமதிக்கப்பட்ட நிலையில், அருவிகளில் குளிக்க நீண்ட வரிசையில் நின்று ஆரவாரத்துடன் உற்சாகமாக குளித்துச் செல்கின்றனர் சுற்றுலாப் பயணிகள்.

9 மாதத்திற்கு பின் குற்றால அருவி திறப்பு: குவியும் சுற்றுலா பயணிகள்!

author img

By

Published : Dec 15, 2020, 10:22 AM IST

Updated : Dec 15, 2020, 10:39 AM IST

தென் மாவட்டத்தில் பிரதான சுற்றுலாத் தளமான குற்றால அருவிகள், மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்துள்ளது. குற்றால அருவிகளைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலகட்டமாகும். இந்த சீசன் காலகட்டத்தில் குளிப்பதற்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பயணிகள் வந்து நீராடி செல்வது வழக்கம்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாகச் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி அருவிகள் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழ்நாடு அரசு கரோனா தடை உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் குற்றால அருவிகள் மட்டும் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்தது. குற்றாலத்தை திறக்கக்கோரி வியாபாரிகள், பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் தொடர்ந்து கோரிக்கைவிடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றுமுதல் குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

9 மாதத்திற்குப் பின் குற்றால அருவி திறப்பு: குவியும் சுற்றுலாப் பயணிகள்!

இதனைதொடர்ந்து மெயின் அருவியில் சிறப்பு பூஜை, அருவிகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் ஆகியோர் நீண்ட வரிசையில் நின்ற நிலையில், அவர்களை உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின் சமூக இடைவெளியுடன் குளிப்பதற்கு அனுமதித்தனர்.

இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், வருடம் வருடம் குற்றால அருவிகளில் குடும்பத்துடன் குளிப்பது வழக்கம். இந்தக் கரோனா தடை உத்தரவு காரணமாக பல மாதங்களாக அருவிகள் திறக்கப்படாதது, வருத்தத்தை அளித்ததாகவும், தற்போது குளித்தது புதிய உற்சாகத்தை அளித்ததாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க...'பாட்ஷா' பாணியில் ரஜினியின் அரசியல் நுழைவு?

Last Updated : Dec 15, 2020, 10:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.