நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்று அதிகரித்துவருகின்றது. இதைத் தடுப்பதற்கான அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுவருகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டைப் போல மக்கள் கூடும் சந்தைகளை இடம் மாற்றம் செய்து தகுந்த இடைவெளியைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த வகையில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் பிரசித்திப் பெற்ற சங்கரநாரயணசுவாமி கோயில் அருகே செயல்பட்டுவந்த மலர் சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் அதிகப்படியான உழவர்கள் வருவதால் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதால், கோயில் அருகே செயல்பட்டுவந்த மலர்சந்தை தற்காலிகமாக இன்றுமுதல் (ஏப். 27) மூடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வியாபாரிகள் இணைந்து ரயில்வே பீடர் சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு இடம் மாற்றம்செய்து தற்காலிகமாக மலர் சந்தை செயல்படத் தொடங்கியது.