தென்காசி: சோகோ ஒரு இந்திய மென்பொருள் மேம்பாட்டு நிறுவனம். மென்பொருள் தொழிலில் ஈடுபட்டுள்ள சோகோ நிறுவனம் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.
இதனால் ஸ்ரீதர் வேம்பிற்கு மென்பொருள் தொழில் வேலைவாய்ப்பு மூலம் கிராமப்புற வளர்ச்சிக்கு உதவியதற்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் கோவிந்த பெரி கிராமத்தில் உள்ள ஸ்ரீதர் வேம்பு இல்லத்திற்கு நேரடியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார்.
சோகோ மென்பொருள் நிறுவனம் இணைய அடிப்படையிலான வணிக கருவிகள், தகவல் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகிறது. இந்நிறுவனம் 1996ஆம் ஆண்டில் கலிஃபோர்னியாவின் ப்ளேசன்டனில் ஸ்ரீதர் வேம்பு, டோனி தாமஸ் ஆகியோரால் நிறுவப்பட்டது.
இதையும் படிங்க: Watch Video: பத்ம விருதுகள் பெற்ற தமிழர்கள்!