தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள அழகுநாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மன்மதராஜ் (35). இவர், அப்பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.
இப்பள்ளியில் படித்த 19 வயது முன்னாள் மாணவி, தற்போது கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்தப் பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர் மன்மதராஜிடம், மாணவி சந்தேகங்கள் கேட்டு, அதற்கு அவர் விளக்கமும் அளித்துவந்துள்ளார்.
ஆசிரியர் மீதான மரியாதையால், கல்லூரிக்குச் சென்றபின்னரும் ஆசிரியருடன் மாணவி தொடர்பில் இருந்துவந்துள்ளார். இந்தச் சூழலில் மன்மதராஜை தொலைபேசியில் தொடர்புகொண்ட மாணவி, தனக்கு பாடத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
தான் குற்றாலம் பூங்காவில் இருப்பதாகவும், அங்கு வரும்படியும் மாணவியை மன்மதராஜ் அழைத்துள்ளார். ஆசிரியர் தெரிவித்த குற்றாலம் பூங்காவுக்கு மாணவி சென்றார். அப்போது, பாடத்தில் சந்தேகத்தைத் தீர்ப்பதாகப் பேசிக்கொண்டிருந்த மன்மதராஜ், திடீரென மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டதையடுத்து, அங்கிருந்த பொது மக்கள் ஆசிரியரை பிடித்து வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த குற்றாலம் காவல்துறையினர், ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர்.
இதன் பின்னர் இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக ஆசிரியர் ஒப்புக்கொண்டதின் பெயரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைதுசெய்தனர்.
இதையும் படிங்க... இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - போலீஸுக்கு அடி உதை