தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தில் உள்ள ஏழு உள்பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக்கோரி அச்சமூக மக்கள், அமைப்புகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தேவேந்திரகுல வேளாளர் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு
இந்நிலையில் மாநில அரசு பரிந்துரையின்படி, தேவேந்திரகுல வேளாளர் என பொதுப்பெயரிட்டு அழைக்க மத்தியில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அச்சமூக மக்கள் அதிமுகவுக்கு ஆதரவாக நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, இன்று (மார்ச். 30) தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் பொதுமக்களைச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழக விடுதலைக் களப் பெண்கள்
இந்நிலையில் செங்கோட்டை அருகே உள்ள தெற்கு மேடு பகுதியில் தமிழக விடுதலைக் களம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், அதிமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியதையடுத்து, அதிமுக வெற்றிக்காக உறுதுணையாக செயல்படுவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'அடுக்கு மொழியெல்லாம் இல்லை ஆபாச மொழிதான் - பரப்புரைக்கு நேர்ந்த பரிதாபம்'