ETV Bharat / state

சிவகிரியில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் - Sivagiri Senaithalaivar Higher Secondary School

தென்காசி அருகே சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகளில் ஏராளமான மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 29, 2022, 2:28 PM IST

தென்காசி: பள்ளிக்கல்வித்துறை சார்பாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. அதனொரு பகுதியாக, கடையநல்லூர் அருகே சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று (ஆக.29) நடைபெற்றன.

இதில் புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி, அரியநாயகிபுரம், வீரசிகாமணி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அரசு, தனியார் பள்ளிகளான 39 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர். மாணவிகளுக்கான நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டுஎறிதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதனை ஏராளமான மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். சங்கரன்கோவில் கல்வி வட்டார ஆசிரியர்கள் இந்த போட்டிக்கான ஏற்பாடு செய்திருந்தனர். மேலும், இதில் வெற்றி பெற்ற மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வட்டார அளவிலான விளையாட்டு போட்டி

இதையும் படிங்க: கோவையில் மாற்றுத்திறனாளர்களுக்கான சுயம்வர நிகழ்ச்சி.. பலர் பங்கேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.