மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தங்கம், வெள்ளி மொத்த வியாபாரம் செய்பவர் வீட்டில் 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு, வீட்டிலிருந்த இரண்டு பேரை கழுத்து அறுத்து படுகொலை செய்துவிட்டு அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று தப்பியோடியது.
அந்தக் கும்பலைச் சேர்ந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், ஒருவரை காவல் துறையினர், சுட்டுக்கொலை செய்தனர். அவர்களிடமிருந்து, இரண்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். இந்தக் கொள்ளை சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்து நகைகளை பறிமுதல் செய்த தமிழ்நாடு காவல் துறைக்கு அடகு மற்றும் நகை வியாபாரிகள் சங்க மாநில தலைவர் சுவாமி தேஜானந்த, மத்திய மண்டலம் ஜஜி ஜெயராமனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
தமிழ்நாடு காவல்துறை, இந்திய காவல் துறையினருக்கு எடுத்துக்காட்டாக இந்தச் சம்பவம் விளங்குகிறது எனப் பாராட்டினார். மேலும், ராஜஸ்தான் மட்டும் அல்லாது வட மாநிலத்தவர்கள் யார் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டாலும் அவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: சீர்காழி நகை கொள்ளை: என்கவுன்ட்டரில் ஒருவர் சுட்டுக்கொலை