தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் காவல்துறை சரகம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (60). அதே ஊரைச் சேர்ந்த இவரது அண்ணன் மகன் மாடசாமி. சுடலைமுத்துவிற்கும் மாடசாமிக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று (07-06-2020) மாடசாமி சுடலைமுத்துவிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில் மாடசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுடலைமுத்துவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுடலைமுத்து துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் மாடசாமி உடனடியாக, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையும் படிங்க: குடும்பச் சண்டையால் கணவனை அடித்துக்கொன்ற மனைவி