நெல்லை நகரைச் சேர்ந்தவர் நடராஜன். இவர், தனது இருசக்கர வாகனத்தைப் பேருந்து நிலையத்தில் உள்ள கடையின் முன் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். அப்போது, அதன் அருகில் இருந்த காரிலிருந்து வந்த பாம்பு ஒன்று, நடராஜனின் வாகனத்தின் இன்ஜினுக்குள் புகுந்தது. பாம்பினைக் கண்டு பொதுமக்கள் கூச்சலிடுவதைக் கேட்டு வந்த நடராஜன், அருகில் இருந்தவர்கள் உதவியோடு வாகனத்தில் புகுந்த பாம்பை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.
எவ்வளவு முயற்சித்தும் பாம்பை வெளியே எடுக்க முடியாததால், வாகனத்தை இயக்கினால் சூடு தாங்க முடியால் பாம்பு வெளியேறிவிடும் என்று அருகில் இருப்பவர்கள் சொன்ன யோசனையை செயல்படுத்தினார்.
இதனையடுத்து வெளியே வந்த பாம்பு மற்றொரு வாகனத்தில் புகுந்துகொண்டது. இதனால், பொறுமை இழந்த மக்கள் கம்பைக் கொண்டு வாகனத்தை சரமரியாக அடித்ததில் ஒரு வழியாக, சுமார் ஐந்து அடி நீளம் கொண்ட பாம்பு வெளியேறியது. வெளியேறிய பாம்பை சிலர் கம்பால் அடித்ததையடுத்து உயிரிழந்தது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் பார்க்க: ஹைதராபாத் சாலையில் உலாவரும் சிறுத்தை: பொதுமக்கள்