ETV Bharat / state

'செந்தில் பாலாஜி தன்னுடன் மு.க.ஸ்டாலினையும் சிறைக்கு கூட்டிப் போவார்' - ஷியாம் கிருஷ்ணசாமி சர்ச்சை பேச்சு

'அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் வைத்திருந்தால், அவர் தன்னோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சிறைக்கு அழைத்துச் செல்வார்' என்று ஷியாம் கிருஷ்ணசாமி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : May 27, 2023, 7:30 PM IST

Updated : May 27, 2023, 7:54 PM IST

Etv Bharat
Etv Bharat
தென்காசியில் புதிய தமிழகம் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி: டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தேரடி திடல் முன்பு இன்று (மே 27) புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலகுக: அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஷியாம் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசுக்கு எதிராகவும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஷியாம் கிருஷ்ணசாமி, "தமிழகம் முழுவதும் செயல்பட்டு கொண்டிருக்கும் சட்ட விரோத பார்களை மூட வலியுறுத்தியும் மது ஆலைகளை மூட வலியுறுத்தியும் விழுப்புரம் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் மதுவால் உயிரிழந்த 25 பேரின் இறப்பிற்கு உடனே அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தமிழக ஆளுநரிடம் செந்தில் பாலாஜியின் முழு ஊழல் தகவல்களையும் சமர்ப்பித்து உள்ளதாக தெரிவித்த அவர், தமிழகம் முழுவதும் நடந்து வரும் சட்ட விரோத பார்களை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி உள்ளதாகவும் கூறினார்.ஒவ்வொரு ஊர்களிலும் 100 பார்கள், 75 பார்கள் என சட்ட விரோதமாக செயல்படும் பார்கள் மூடப்பட்டு வருவதாகவும் ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 120 பார்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது மட்டுமில்லாது தேனியில் 75 பார்கள், திருவாரூரில் 75 பாரிகள் என பல்வேறு இடங்களில் சட்டவிரோத பார்கள் மூடப்பட்டு வருவதாக கூறிய அவர், மக்கள் மது அருந்தும்போது, அது சட்டவிரோதமாக செயல்படும் பார்களா? அல்லது லைசன்ஸ் மூலம் இயங்கும் பார்களா? என்பதுகூட தெரியவில்லை என்று குற்றம்சாட்டினார். இவ்வாறு மதுபானங்களை குடிப்பவர்கள் அது தரமானதா? அல்லது சட்டவிரோதமாக வந்த மதுபானமா? என தெரியாமல் குடிப்பதாகவும் அவர் பேசினார்.

இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் அனைத்து மதுபான ஆலைகளையும் மூட வேண்டும் என்றும் இல்லையெனில், புதிய தமிழகம் சார்பில் மூட வேண்டிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல், மதுவால் உயிரிழந்த 25-க்கும் மேற்பட்ட குடும்பங்களை அமைச்சர் நேரில் சென்று பார்த்தாரா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

செந்தில்பாலாஜியுடன் முதலமைச்சருக்கும் சிறை: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் வைத்திருந்தால், செந்தில் பாலாஜி மட்டும் சிறைக்கு செல்ல மாட்டார் என்றும் அவர் தன்னுடன் ஸ்டாலினையும் கூட்டிக்கொண்டு தான் செல்வார் என்றும் கடுமையான சாடியுள்ளார். ஒரு லட்சம் கோடி ஊழல் ஆதாரங்களை ஆளுநரிடம் கொடுத்துள்ள நிலையில், அந்த பட்டியலைப் பார்த்துவிட்டு கூட வருமான வரித்துறையினர் சோதனைக்கு வந்திருக்கலாம்" என்று அவர் கூறினார். இதைத்தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகளின் வாகனங்கள் தாக்கப்பட்டது சம்பந்தமாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இந்த செயல் மிகவும் கண்டனத்துக்குரியது என்றும் தமிழகத்திற்கு அவதூறு ஏற்படுத்தக்கூடிய வகையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், எங்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் ரைடு குறித்து முன்னதாகவே கூறவில்லை என்று கூறியதாகவும், அப்படி முன்னதாகவே தகவல் தெரிவிக்கவில்லை என்றால் திமுகவினர் வருமான வரித்துறை அதிகாரிகளை இப்படி தாக்குவார்களா? என்றும் வருமான வரித்துறையை தாக்குவதற்கு அவர்கள் என்ன தீவிரவாதிகளா? அல்லது ரவுடிகளா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

கண் துடைப்புக்காக நிவாரணம்: விஷ சாராயம் அருந்தி மரக்காணம் பகுதியில் 23 பேர் உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். ஆனால், பட்டாசு விபத்து மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கு எல்லாம் எந்த நிவாரணமும் இல்லை என்றும் அதற்காக போராட வேண்டிய நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். இதனிடையே, ஊழல்களை மறைப்பதற்காகவே இந்த கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுவதாக கூறிய அவர், இந்த ஊழல் விவகாரம் அவர்களுக்கு எதிராக திரும்பி விடக்கூடாது என்பதற்காகவே இந்த ரூ.10 லட்சம் நிவாரணமாக அளித்துள்ளதாக சாடினார்.

சர்ச்சை பேச்சு: இதனிடையே, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்லும்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் தன்னுடன் அவர் அழைத்து செல்வார் என்பதாக அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஷியாம் கிருஷ்ணசாமி சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வருமான வரித்துறையினர் தாக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: நீதிமன்றத்தில் வழக்கு

Last Updated : May 27, 2023, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.