ETV Bharat / state

தென்காசியில் அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட இளைஞர் கைது! - arivaal

Sengottai police: கையில் அரிவாளோடு இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசியில் அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட இளைஞர் கைது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 8:48 AM IST

தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் உள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தில் வசித்து வருபவர், முத்து இருளப்பன். இவரது மகன் உதயகுமார் (23). இவர், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கையில் அரிவாளை ஏந்தியபடி போட்டோ மட்டும் வீடியோக்களை எடிட் செய்து பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், அவரது வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அதனைக் கண்ட செங்கோட்டை காவல்துறை அதிகாரிகள், நேற்று (நவ.28) அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். அப்போது, அவர் உபயோகித்த அரிவாள் மற்றும் தொலைபேசியையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், உதயகுமாரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் போலீசார் முடக்கி உள்ளனர். பின், உதயகுமார் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த செங்கோட்டை போலீசார், அவரை தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையும் படிங்க: சென்னையில் பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.