தென்காசி: சிந்தாமணியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். வழக்கறிஞரான இவர், வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2 முறை பாஜக சார்பில் போட்டியிட்டுள்ளார். இதனிடையே திமுக தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளரும், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜாவுக்கும், வழக்கறிஞர் ராஜ்குமாருக்கும் இடையே அரசியல் மோதல் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா, சமீபத்தில் நடைபெற்ற கோயில் கொடை விழாவின்போது, ராஜ்குமாரைச் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் அவரது வலது கண் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக ராஜ்குமாரின் மனைவி கோபிகா கூறுகையில், “தென்காசி மாவட்டத்தில் திமுக மட்டுமே இருக்க வேண்டும். பாஜக வளரக் கூடாது எனவும், தனக்கு எதிராக அரசியலில் செயல்பட கூடாது எனவும் பகையை மனதில் வைத்து, மக்கள் பிரதிநிதியாக இருக்கக் கூடிய ஒரு சட்டமன்ற உறுப்பினர் இவ்வாறு செயல்பட்டுள்ளார். கண் குறைபாடு ஏற்பட்ட நிலையில், கொலை முயற்சியும் அவர் விடுத்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை இருந்து வருகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வீடியோ: வார்டு கவுன்சிலரை தலையில் தட்டிய அமைச்சர் கே.என்.நேரு