ETV Bharat / state

தூய்மை பணியாளர்களுக்கு 2 மாதமாக ஊதியம் வழங்கவில்லை: சங்கரன்கோவிலில் 2ம் நாள் போராட்டம்! - etv bharat tamil

சங்கரன்கோவிலில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த 2 மாதம் ஆக ஊதியம் வழங்கவில்லை, இதுகுறித்து அரசு அதிகாரிகளிடமும் பலமுறை கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தூய்மை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

sankarankovil Sanitary workers
தொடரும் போராட்டம்... தூய்மை பணியாளர்கள் வேதனை
author img

By

Published : Jul 20, 2023, 2:10 PM IST

2ம் நாளாக தொடரும் போராட்டம்... தூய்மை பணியாளர்கள் வேதனை

தென்காசி: சங்கரன்கோவில் நகராட்சியில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நகராட்சி ஆணையர் மற்றும் அரசு தரப்புக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதனால், தங்களது உரிய சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என ஏற்கனவே பலமுறை தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், ஜூலை 19 நேற்று வேலை நிறுத்தம் மற்றும் நகராட்சி அலுவலகத்திற்கு எதிரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: Tenkasi: குற்றாலம் ஹோட்டலில் கெட்டுப்போன 50 கிலோ உணவுப்பொருட்கள் பறிமுதல்!

அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நகராட்சி அதிகாரிகள் உடனடியாக சம்பளம் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். பின்னர், தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு சென்றனர். ஆனாலும், மாலை வரை சம்பளம் வழங்கப்பாடததால் இன்று(ஜூலை 20) மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் கூறியதாவது, "தங்களை நம்பியுள்ள குடும்பங்களுக்கும் எந்த கடமையையும் ஆற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இரு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என வேதனையுடன் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு மோசடி - நயினார் பாலாஜியின் பத்திரப்பதிவு ரத்து

மேலும், தூய்மை பணியாளர்கள் கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என தற்போது 2ம் நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இதுவரை கவுன்சிலர், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் என யாரும் தங்களை வந்து பார்க்கவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

தற்போது தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் சங்கரன்கோவில் நகர் முழுவதும் தூய்மை பணிகளில் நடக்காமல் உள்ளது. மேலும், ஆடி தபசு திருவிழா வருவதால் தூய்மை பணியாளர்களின் பணி மிகவும் அவசியம் என்ற நிலையும் அவர்களுக்கான சம்பள பாக்கியை உடனடியாக நகராட்சி நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து கூறுகின்றனர்.

இதையும் படிங்க: Manipur Violence: பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம் - முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட தலைவர்கள் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.