தென்காசி: சுரண்டை அரசு கல்லூரியில் வணிகவியல் துறையில் மாணவி ஒருவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவருக்கு வணிகவியல் துறையில் தலைவராக இருந்து வரும் அஜித் என்பவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தட்ட மாணவி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளார். இதற்கிடையே இன்று காலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வரும் பேராசிரியரை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சம்பந்தப்பட்ட பேராசிரியரை கல்லூரி நிர்வாகம் பணியிடம் மாறுதல் செய்வதாக உத்தரவு அளித்தது. அதன் பேரில் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதையும் படிங்க: நகைகளுக்கு பாலிஷ் போடுவதாக மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள்; வழக்கு பதிவு செய்யாமல் போலீஸ் அலட்சியம்