தென்காசி: குமரிக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 17, 18ஆம் தேதிகளில் இடைவிடாத மழை பெய்தது. இதன் காரணமாக மாவடத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன.
தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. வெள்ள நீரானது குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்ததினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, தென்காசி, கடையநல்லூர் அருகே உள்ள பொய்கை கிராமத்தில் பெய்த கனமழை காரணமாக இப்பகுதியில் உள்ள குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
மேலும், இங்குள்ள பொய்கை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, அண்டனூர், கள்ளம்புலி, வேலாயுதபுரம் போன்ற கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்கு வருவது வழக்கம். இந்நிலையில், இப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக ஆரம்ப சுகாதார நிலையம் முழுவதுமாக மழை வெள்ளாதால் மூழ்கியுள்ளது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையம் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறை மழை பெய்யும் பொழுதும் இப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாரதார நிலையம் குளம் போன்று காட்சி அளிப்பதினால் அவற்றை வேறோரு இடத்திற்கு மாற்றி அமைக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், அவசர நிலைக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்றால் தென்காசிக்கு செல்ல வேண்டிய சூழல் இருப்பதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே, மழை நீர் வடிய பணிகள் மேற்கொள்ளுமாறும், ஆரம்ப சுகாதார நிலையத்தை இடம் மாற்றி அமைக்குமாறும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், தற்பொழுது வரை தண்ணீர் வடியாத நிலையில் ஆரம்ப சுகாதாரர்களும் தண்ணீரில் தத்தளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 190 நடமாடும் மருத்துவ முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!