ETV Bharat / state

Video: பெண்ணிடம் தவறாக நடந்த ஆட்டோ ஓட்டுநருக்கு விளக்கமாற்றால் அடி - ஆட்டோ ஓட்டுநருக்கு விளக்குமாறு அடி

தென்காசி அருகே ஆட்டோவில் ஏறிய பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆட்டோ ஓட்டுநரை பாதிக்கப்பட்ட பெண் உள்பட அவரது குடும்பத்தினர் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஆட்டோ ஓட்டுநருக்கு விளக்குமாறு அடி
ஆட்டோ ஓட்டுநருக்கு விளக்குமாறு அடி
author img

By

Published : Apr 24, 2022, 4:31 PM IST

தென்காசி: செங்கோட்டை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறை அலுவலகம் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 18ஆம் தேதி செங்கோட்டை தேரடி தெருவிலுள்ள ஆட்டோ நிறுத்தத்தில் இருந்த கண்ணன் என்பவரது ஆட்டோவில் அங்கன்வாடி மையத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது ஆட்டோ ஓட்டுநரான கண்ணன் அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைப் பொறுத்துக்கொண்டு அந்தப் பெண் ஆட்டோவை விட்டு இறங்கி, இதுகுறித்து தனது கணவருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் பாதிக்கப்பட்ட பெண் கண்ணனை சரமாரியாக தாக்கத்தொடங்கினார். ஒரு கட்டத்தில் கண்ணன் அந்தப் பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த குடும்பத்தினர் கண்ணனை தாக்கினர்.

ஆட்டோ ஓட்டுநருக்கு துடைப்பத்தால் அடி

மேலும், ஆட்டோ ஓட்டுநருக்கு யாரும் சிபாரிசு செய்யக்கூடாது என ஆட்டோ நிறுத்தத்தில் இருந்த மற்ற ஆட்டோ ஓட்டுநர்களிடம் கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து அப்பெண் இதுகுறித்து செங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கண்ணனை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: முகமூடி அணிந்து பட்டப்பகலில் படுகொலை செய்த மூன்று பேர் : காவல்துறை விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.