ETV Bharat / state

ஒரே ஆட்டோவில் 25 குழந்தைகள் - பள்ளி நிர்வாகத்தை கண்டிக்கும் பெற்றோர் - ஆட்டோவில் செல்லும் பள்ளி மாணவர்கள்

தனியார் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களை ஆடு, மாடுகளைப் போல் ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் பள்ளி நிர்வாகத்திற்கு பெற்றோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஒரே ஆட்டோவில் 25 குழந்தைகள்
ஒரே ஆட்டோவில் 25 குழந்தைகள்
author img

By

Published : Mar 30, 2022, 3:48 PM IST

தென்காசி: சென்னையில் பள்ளி வாகன ஓட்டுநரின் கவனக்குறைவால் வாகனம் மோதிய விபத்தில், 2ஆம் வகுப்பு பயிலும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து ஏற்பட்டதில் இருந்து பெற்றோர் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேவுள்ள ஆவுடையானூர் பகுதியில் டிடிடிஏ (TDTA) தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், பயிலும் 25-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை, பள்ளி நிர்வாகம் ஆட்டோவில் ஏற்றிச் செல்கிறது. இதுகுறித்து ஆசிரியரிடம் கேட்டால் பள்ளி தலைமையாசிரியரிடம் கேளுங்கள் என பதில் கூறுவதாகத் தெரிகிறது.

இதுபோன்று பள்ளிக்குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் ஆட்டோவில் ஏற்றி விபத்திற்கு வழிவகுத்து உயிர் பலி வாங்க துடிக்கும் TDTA தொடக்கப்பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரே ஆட்டோவில் பள்ளி செல்லும் 25 குழந்தைகள்

பெற்றோர்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிகொடுத்து, பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இதையும் படிங்க: பள்ளி ஆசிரியரை பீர் பாட்டிலால் குத்த முயன்ற மாணவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.