தென்காசி மாவட்டத்தில், கடந்த மாதங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது படிப்படியாக உயர்ந்து வந்த நிலையில், தென்காசி தலைமை அரசு மருத்துவமனையுடன் சேர்த்து சித்த மருத்துவ முறையிலும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. இதற்காக ஆயிக்குடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 156 படுக்கை வசதியுடன் சித்த மருத்துவ சிகிச்சை மையம் கடந்த ஜூலை மாதம் திறக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா கூறுகையில், 'இந்த சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் இதுவரை 1,409 நபர்கள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு மூன்று வேளைகளும் மூலிகை உணவுகள், மாலை சிறுதானிய உணவுகள், அவித்த நிலக்கடலை ஆகியவை அங்கேயே பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. மேலும் பிரம்மானந்த பைரவ மாத்திரை, மூலிகை தேனீர், மூலிகையை ஆவிப் பிடித்தல் ஆகிய மருத்துவ சிகிச்சைகளும் உடல் தகுதித் திறனுக்கான ஆசனப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
இதன் காரணமாக தனியார் கல்லூரியில் செயல்பட்டு வந்த சித்த மருத்துவ சிகிச்சை மையம் தற்காலிகமாக மூடப்படும். அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவர்களுக்கான படுக்கை வசதி கோரியுள்ளோம். நோயாளிகள் சித்த மருந்துகளை எப்போது வேண்டுமானாலும் தென்காசி சித்த மருத்துவ மையங்களில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 100% பாதுகாப்புடன் பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளி தாளாளர்கள் சங்கம்