தென்காசி: கடையம் அருகே வாகைகுளம் பகுதியை சேர்ந்தவர் பச்சி ராஜன்(54). விவசாயியான இவர் குடும்பத்துடன் ஆழ்வார்குறிச்சியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடையம், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், ஆம்பூர், ஆகிய பகுதிகளில் நேற்று(நவ.08) மதியம் முதல் இடியுடன் கூடிய மழை பெய்தது.
அப்போது பச்சி ராஜன் ஆழ்வார்குறிச்சியில் இருந்து ஆம்பூர் செல்லும் வழியில் உள்ள வயலில் வேலை பார்த்து வந்தார். திடீரென இடி மின்னலுடன் மழை பெய்ததால் பச்சி ராஜன் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனை அருகில் பார்த்துக் கொண்டிருந்த மாடு மேய்ப்பவர் வேல் என்பவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அம்பை மருத்துவமனையில் சேர்த்தனர். பச்சி ராஜன் உடல் உடற்கூராய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. . இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மழை நீரை அகற்றாமல் காங்கீரிட் அமைக்கும் பணி ; இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட்