தென்காசியில் தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியான ஆரியங்காவு வனச்சரக அலுவலகத்தில் 14 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று புகுந்துள்ளது. உடனே ராஜநாகத்தை பிடிக்க வனத்துறையினர் பயிற்சி பெற்ற சமூக ஆர்வலரான சுரேஷ் என்பவரை தொடர்பு கொண்டு அழைத்துள்ளனர்.
அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு வந்த அவர், ராஜநாகத்தை லாவகமாக பிடித்தார். மேலும் அந்த ராஜநாகத்திற்கு 8 வயது இருக்கும் என்று அவர் கூறினார்.
பின்னர் சுரேஷ் பிடிபட்ட ராஜநாகத்தை வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து வனத்துறையினர் அந்த ராஜநாகத்தை பத்திரமாக எடுத்துச் சென்று வனப்பகுதியில் விட்டனர்.
இதையும் படிங்க: 6 அடி நீள சாரைப் பாம்புகளை அசால்ட்டாக பிடித்த 'பாம்பு பாண்டியன்'