ETV Bharat / state

"ஏலே..! நாங்களும் பட்டம் வாங்குவோம்" புளியங்குடி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா! - தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசி மாவட்டம், புளியங்குடி ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்ளியில் மழலையருக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

புளியங்குடி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா!

author img

By

Published : Apr 13, 2023, 1:46 PM IST

புளியங்குடி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா!

தென்காசி: சிந்தாமணி அருகே உள்ள புளியங்குடி ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஸ்ரீ கண்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி துவங்கி சுமார் 39 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

பள்ளி குழந்தைகளை ஊக்குவிக்கும் நிலையில் ஒவ்வொரு வருடமும் பள்ளி குழந்தைகளுக்கு ஷீல்டு மற்றும் பட்டமளிப்பு விழா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் இங்கு படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வம் சிறுவயதில் இருந்தே ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் இங்கு பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு விதமான திறமைகளை வளர்த்துக் கொள்ளும் அளவிற்கு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

மேலும், இந்த பள்ளியில் பாம்பு கோவில், நடுவக்குறிச்சி, முள்ளிக்குளம் நகரம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், சிவகிரி, புளியங்குடி, கடையநல்லூர், வீரசிகமணி உள்ளிட்ட பகுதியிலிருந்து பள்ளிக் குழந்தைகள் படிக்க வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு இந்த பள்ளி குழந்தைகள் தாங்களாகவே விழாவிற்கு வருகின்ற பெற்றோர்களையும், பொது மக்களையும் வரவேற்கும் விதமாக பல்வேறு விதமான நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன.

பள்ளி குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் நடனம், கலை நிகழ்ச்சி, சிலம்பாட்டம் மற்றும் ஓவிய போட்டி என பல்வேறு விதமான போட்டிகளும் நடைபெற்றது. மேலும் ஸ்ரீ கண்ணா பள்ளியின் கலையரங்கில் வைத்து நடைபெற்ற இந்த விழாவிற்கு ஸ்ரீ கண்ணா கல்வி குழுமங்களின் தலைவர் சுபாஷ் கண்ணா தலைமை வகித்தார்.

நிர்வாக இயக்குநர் டாக்டர்.பார்கவி கண்ணா நிகழ்வில் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை அன்னகளஞ்சியம் பள்ளியின் ஆண்டு அறிக்கை வாசித்து அனைவரையும் வரவேற்றார். பின் முதலாம் வகுப்பு செல்லும் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சுமார் 60 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் இதில் குழந்தைகள் பெற்றோர்கள், மற்றும் தாத்தா, பாட்டியுடன் வந்து பட்டம் பெற்றனர்.

பின்னர் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும், நூறு சதவீத வருகை பதிவேடு உள்ள மாணவர்களுக்கும் விளையாட்டு, மற்றும் பிற துறைகளில் சாதித்த மாணவ, மாணவியர்களுக்கும் விருதுகள் வழங்கபட்டது. நடப்பு கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களுக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்ததைக் குறித்து பள்ளி தலைமை ஆசிரியை அன்னகளஞ்சியம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க: தென்காசியில் கொளுத்தும் வெயிலிலும் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.