ETV Bharat / state

மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு வங்கி கணக்கு தொடக்கம்..! - கடையநல்லூர்

புளியங்குடி பகுதியில் உள்ள மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு, கிராம வங்கிகளில் கணக்கு தொடங்கப்பட்டு, வங்கி கணக்கு புத்தகம் வழங்கப்பட்டது.

கிராம வங்கி
கிராம வங்கி
author img

By

Published : Aug 4, 2022, 2:23 PM IST

தென்காசி: புளியங்குடியில் வங்கி கணக்கு இல்லாத மலைவாழ் பழங்குடியின கிராம மக்களுக்கு தமிழ்நாடு கிராம வங்கி மூலம் புதிய வங்கி கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அதற்கான வங்கி கணக்கு புத்தகம் வழங்கப்பட்டது.

கடையநல்லூர் அருகே புளியங்குடி பகுதியில் வாழ்ந்து வரும்பழங்குடியின மக்கள் இதுவரை வங்கி கணக்கு இல்லாமல் வாழ்ந்துவந்துள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு வங்கிக் கணக்கு வழங்க தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் சிவசுப்புலட்சுமி முடுவு செய்து, அம்மக்களின் வசிக்கும் இடத்திற்கு வங்கி ஊழியர்கள் கடந்த ஜூலை30 ஆம் தேதி, நேரடியாக சென்று 50 குடும்பங்களுக்கு முதல்கட்டமாக வங்கி கணக்கு வழங்கி வங்கி கணக்கு புத்தகத்தையும் வழங்கினார்.

பழங்குடியின மக்களுக்கு வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடக்கம்

மேலும், முதல் முறையாக தங்களுக்கு வங்கி கணக்கு வழங்கப்பட்டதால், காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டதன் அவசியம் பற்றி வங்கி ஊழியர்கள் எடுத்துக்கூறினர். அத்துடன், ஓஏபி பென்ஷன் உள்ளிட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை அனைத்தும் வங்கி கணக்கு முலம் தான் பண பரிவர்த்தனை நடைபெறும் என்பதால் வங்கி கணக்கு முக்கியமான ஒன்றாக உள்ளது. இதைப்பற்றி அறியாத அந்த மக்களுக்கு இது குறித்து வங்கி ஊழியர்கள் விளக்கினர்.

வங்கி கணக்கில் பணம் சேமிக்கலாம் என்பதால் அந்த இடத்திலேயே 100, 200, 500 எனக் கொண்டு வந்து புத்தகத்தில் வரவு வைத்துக் கொண்டனர். மேலும், அரசின் திட்டங்கள் பற்றியும் வங்கி கணக்கு பற்றியும் எதுவும் தெரியாமல் இருந்த அந்த மக்களுக்கு தாமாகவே முன்வந்து வங்கிகணக்கு தொடங்கி கொடுத்த தமிழ்நாடு கிராம வங்கி பணியாளர்களுக்கு அந்த மக்கள் நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: புளியங்குடியில் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி வாழும் மலைவாழ் கிராம மக்கள்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.