தென்காசி: தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகரப் பகுதியில் 2 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. நகர்ப் பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வலம் வந்து செங்கோட்டை நகர எல்லையில் உள்ள குண்டாற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எந்த விதமான அசம்பாவிதமும் இன்றி, தற்போது 34 பிள்ளையார் சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஊர்வலம் முடிவடைந்த நிலையில், ஒவ்வொரு சிலையாக குண்டாற்றில் கரைக்கப்பட்டது. இப்பணிகள் மூன்று கிரேன்கள் உதவியுடன் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: 'முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை?' - எல். முருகன்