ETV Bharat / state

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு: இருவர் உயிரிழப்பு, ஒருவர் மீட்பு - courtallam falls

குற்றால மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட மூவரில், இருவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் மீட்கப்பட்டார்.

குற்றால் அருவியில் வெள்ளப்பெருக்கு: இருவர் உயிரிழப்பு  ஒருவர் மீட்பு

author img

By

Published : Jul 28, 2022, 7:54 AM IST

Updated : Jul 28, 2022, 10:07 AM IST

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், மூன்று பேர் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் பண்ருட்டியைச் சேர்ந்த கலாவதி மற்றும் சென்னையைச் சேர்ந்த மல்லிகா ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

இதில் சிக்கிய மேலும் ஒருவரை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப்படையினரால் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி, வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு

இதனிடையே குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் ஆகிய பகுதிகளில் ஆடி அமாவாசையை முன்னிட்டு யாரும் குற்றாலம் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

குற்றால் அருவியில் வெள்ளப்பெருக்கு: இருவர் உயிரிழப்பு ஒருவர் மீட்பு

இதையும் படிங்க: குற்றாலத்தில் கொட்டித்தீர்த்த மழை; திடீர் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!

Last Updated : Jul 28, 2022, 10:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.