ETV Bharat / state

கார் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்து.. 5 பேர் உயிரிழப்பு.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி.. - பள்ளி வாகனம் மீது கார் மோதி விபத்து

தென்காசியில் பள்ளி வாகனம் ஒன்று எதிரே வந்த கார் மீது மோதிய கோர விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 24, 2023, 7:57 PM IST

Updated : May 25, 2023, 1:42 PM IST

விபத்து குறித்த சிசிடிவி காட்சி

தென்காசி சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிச்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவே வாகனத்துடன் சேர்ந்து தடுமாறி கீழே விழுந்தார். இதனைக் கண்ட பின்னால் சென்ற பள்ளி வாகன ஓட்டுநர், அவர் மீது வாகனத்தை ஏற்றாமல் இருக்க வாகனத்தை திருப்பினார்.

அப்போது, எதிரே வந்த கார் ஒன்று பள்ளி வாகனத்தின் மீது மோதியது. இந்த கோர விபத்தில், காரில் சென்ற ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நல்வாய்ப்பாக பள்ளி வாகனத்தில் மாணவர்கள் யாரும் இல்லாததால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

Accident CCTV : சீறிப்பாய்ந்த கார்... ஆட்டோ ஓட்டுநர் பரிதாப பலி..

பின்னர், உயிரிழந்த ஐந்து பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, இந்த விபத்து தொடர்பாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்குச் சென்று நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

விபத்தில் சிக்கிய பள்ளி வாகனம் தென்காசி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு சொந்தமானது. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை அமலில் இருக்கும் நிலையில், இந்த பள்ளியில் பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. எனவே பள்ளி முடிந்ததும் மாணவர்களை வீட்டில் அனுப்பி விட்டு திரும்பி வரும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அரசு விதிகளை மீறி தனியார் பள்ளி இயங்கியது குறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணையை துவங்கியுள்ளனர்.

விபத்தில் காரில் சென்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்து திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குருசாமி (45), அவரின் மனைவி வேலுத்தாய் (35), மாமியார் உடையம்மாள் (60), குருசாமியின் மகன் மனோஜ்குமார் (22) ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் ஐயப்பன் என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இரு சக்கர வாகனத்தில் சென்றவர் அதி வேகத்தில் சென்றதால் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததும், அவர் மீது மோதாமல் இருக்க பள்ளி வேன் ஓட்டுநர் வாகனத்தை திருப்பியதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி ஆதாரத்தை கைப்பற்றியும் போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

இதையும் படிங்க: நூதன முறையில் போதை மாத்திரை விற்பனை.. பலே இளைஞர்கள் சிக்கியது எப்படி?

Last Updated : May 25, 2023, 1:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.