தென்காசி அருகே கடையநல்லூர் வனப்பகுதியான பண்பொழி சரக வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கு இடமாக ஐந்து நபர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்ததில் பண்பொழியைச்சேர்ந்த ஆறுமுகச்சாமி(29); பண்பொழியைச்சேர்ந்த காளியப்பன் (35); மேக்கரை பகுதியைச்சேர்ந்த யாசருதீன்(19); மேக்கரையைச்சேர்ந்த முகமதுசஜிர்(19); மேலும் அதே பகுதியைச்சேர்ந்த முகம்மது இஜாஸ்(19) என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணை செய்ததில் பண்பொழி பீட் கன்னி மாரியம்மன் கோயில் சரகத்தில், பெண் கடா மானை வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது பற்றிய விசாரணை செய்தபோது அவர்கள் வேட்டையாடியதை ஒப்புக்கொண்டதன் பேரில் அவர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.
மேலும் கடா மானை வேட்டையாடிய 5 நபர்களுக்குத் தலா ரூ.25,000 வீதம் 1,25,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இனி, இதுபோன்று வனப்பகுதியில் எந்த வன உயிரினத்தையும் அடையாளம் தெரியாத நபர்கள் வேட்டையாட வனத்துறையினர் விடக்கூடாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:சிவகளை அகழாய்வு: முழுமையாக கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழியை திறக்கும் பணி தொடங்கியது!