தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா ஸ்ரீ ரங்கராஜபுரம் கிராமத்தில் செயல்பட்டுவரும் ஆதிமலை சிவகாசியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான காளீஸ்வரி ஃபயர் ஒர்க்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஒருவர் தீக்காயங்களுடன் படுகாயமடைந்தார்.
கழுகுமலை சங்கரன்கோயில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயை அணைத்தனர். திருவேங்கடம் காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். உயிரிழந்தவர் பெயர் சேதுபாண்டியன் (30) என்பதும், காயமடைந்தவர் பெயர் மாரியப்பன் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.