தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட கட்டடத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ பீகார் மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஏற்பட்ட தோல்வி, தமிழகத்தில் எந்த வகையிலும் திமுகவை பாதிக்காது. இங்கு பாஜகவை விட மாநிலக்கட்சிகள்தான் வலுவாக உள்ளன. பாஜக மாநிலத் தலைவர் முருகன் போன்றவர்களும் கோயிலுக்குள் சென்று வழிபடும் உரிமை கிடைப்பதற்காகவே திமுக போராடுகிறது. ஆனால் அது தெரியாமல் முருகன் அரசியல் காரணங்களுக்காக வேல் யாத்திரை நடத்திக் கொண்டிருக்கிறார். அது ஒரு நாடகம்.
நடிகர் கமல்ஹாசன் தேர்தலை சந்தித்து விட்டார், ஆனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்பது அவருக்கே தெரியாது. திமுக போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது. அந்த வகையில் அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனவா? இல்லையா? என்பது மக்களுக்கே தெரியும் ” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உடனடி பணி நியமன ஆணை : நெகிழ்ச்சியில் ஆழ்த்திய முதலமைச்சர்!