ETV Bharat / state

அதிமுக பெண் உறுப்பினரின் சேலையை உருவிய திமுக பிரமுகர்? தேர்தல் நிறுத்தப்பட்டதால் போராட்டம்

பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவியை பிடிப்பதில் திமுக - அதிமுகவினர் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் அதிமுக பெண் உறுப்பினரின் சேலை உருவப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டதை கண்டித்து எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திமுக - அதிமுகவினர் இடையே மோதல்
திமுக - அதிமுகவினர் இடையே மோதல்
author img

By

Published : Oct 22, 2021, 5:59 PM IST

தென்காசி: தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் கடந்த 20ஆம் தேதி பதவி ஏற்றனர்.

தொடர்ந்து மாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 224 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு கூட ஓரளவுக்கு சிக்கல்கள் இல்லாமல் சுமுகமாக தேர்தல் நடைபெற்று முடிந்தன. அதேசமயம் பல்வேறு கிராம ஊராட்சிகளில் துணைத் தலைவர் பதவியை பிடிப்பதில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவியது.

மறைமுக தேர்தல்

அந்த வகையில் தென்காசி மாவட்டம் புளியரை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடந்தது. அப்போது அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர் சரவணன், திமுகவைச் சேர்ந்த வேட்பாளர் குருமூர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே போட்டி நிலவியது.

புளியரை ஊராட்சியில் அதிமுக தரப்பில் 8 வார்டு உறுப்பினர்களும். திமுக தரப்பில் 4 வார்டு உறுப்பினர்களும் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் நான்கு உறுப்பினர்களை மட்டுமே கொண்ட திமுகவினர் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு தான் துணைத் தலைவர் பதவி வழங்கவேண்டும் என்று கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

திமுக - அதிமுகவினர் இடையே மோதல்

திமுக - அதிமுகவினர் இடையே மோதல்

இதனிடையே அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க செல்லும் போது திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து அங்கு இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த பெண் உறுப்பினரின் சேலையை திமுக பிரமுகர் ஒருவர் பிடித்து இழுத்ததாக தெரிகிறது. இதையடுத்து அங்கு துணைத் தலைவருக்கான தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

சேலையை உருவிய திமுக பிரமுகர்?

தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டதை கண்டித்து கடையநல்லூர் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணமுரளி குட்டியப்பா தலைமையில் புளியரையில் இருந்து கேரளா செல்லும் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அப்போது கிருஷ்ணமுரளி குட்டியப்பா காவல் துறையினரிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவர் பேசியதாவது, "பெண்ணின் சேலையை பிடித்து இழுக்கிறார்கள். நீங்களெல்லாம் ஏன் யூனிபார்ம் மாட்டிக் கொண்டு இருக்க வேண்டும். எல்லா மக்களுக்காகவும் நீங்கள் வேலை பார்க்க வில்லையா?. அராஜகத்திற்கு ஒரு அளவு வேண்டாமா?. என்றார்.

எம்எல்ஏ தலைமையில் போராட்டம்

அரை மணி நேரத்தில் மாவட்ட ஆட்சியர் இங்கே வர வேண்டும். இல்லாவிட்டால் 8 உறுப்பினர்களோடு சேர்ந்து நானும் மண்ணெண்ணை ஊற்றி கொள்வேன். நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். தேர்தல் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து நான் ஒருமுறையாவது உங்களிடம் ஏதாவது பேசியுள்ளேனா?. எதற்கு இந்த தேர்தல், நீங்களே யூனிபார்மை கழட்டி விட்டு மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்" என்றார்.

பின்னர் தேர்தல் நடத்தப்படும் என்று அலுவலர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து அதிமுகவினர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: ’அண்ணாமலையுடன் நேரடியாக விவாதிக்க தயார் ’ - அமைச்சர் செந்தில் பாலாஜி சவால்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.