ETV Bharat / state

தீபாவளி நாளில் காசியில் 'கங்கா ஸ்நானம்' செய்யனுமா? - ஐஆர்சிடிசி சிறப்பு சுற்றுலா ரயில் அறிமுகம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

Bharat Gaurav Special Train: தீபாவளியை முன்னிட்டு தென்காசியில் இருந்து காசி போன்ற நாட்டின் பல்வேறு புனித தலங்களுக்கு பாரத் கௌரவ் சிறப்பு ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஐஆர்டிசி தென் மண்டலக் குழு மேலாளர் ராஜலிங்கம் பாசு தெரிவித்துள்ளார்.

தென்காசியில் இருந்து காசிக்கு  பாரத் கௌரவ் ரயில்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 10:21 PM IST

ஐஆர்டிசி தென் மண்டலக் குழு மேலாளர் ராஜலிங்கம் பாசு

திண்டுக்கல்: திண்டுக்கல் பத்திரிகை மன்றத்தில் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக தென் மண்டல குழு பொது மேலாளர் ராஜலிங்கம் பாசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்தாவது, "இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் சார்பில், பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் சேவை "தீபாவளி கங்கா ஸ்நானம் சிறப்பு யாத்திரை" என்ற பெயரில் சுற்றுப்பயணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் பயணிகள், தீபாவளி அன்று காசியில் கங்கா ஸ்நானம் செய்து, பின்னர் ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமியை தரிசிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சுற்றுலா ரயில் தென்காசியில் இருந்து தொடங்கி ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் சென்னை வழியாக காசி, திரிவேணி சங்கமம் (அலகாபாத்), கயா ஆகிய புன்னிய ஸ்தலங்களுக்கு சென்று பின்னர் ராமேஸ்வரம் சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 09ஆம் தேதி தொடங்கி, 08 இரவுகள் மற்றும் 09 நாட்கள் சுற்றுப்பயணமாக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ஆக ஒரு நபருக்கு குளிர்சாதன வசதி கொண்ட வகுப்புக்கு 30,500 ரூபாய் என்றும், சாதாரண வகுப்பில் 16,850 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலா இரயிலில் தங்குமிடம், உள்ளூர் பார்வையிடுவதற்கான போக்குவரத்து, சைவ உணவு, சுற்றுலா மேலாளர் மற்றும் தனியார் பாதுகாவலர் வசதி, பயணக் காப்புறுதி போன்ற வசதிகள் உள்ளன. மத்திய, மாநில மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் இந்த சுற்றுலா ரயிலில் பயணித்தால், LTC சான்றிதழ்களை பெறலாம்" என்று ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக தென் மண்டல குழு பொது மேலாளர் ராஜலிங்கம் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து கூடுதல் தகவல் பெற, www.irctctourism.com என்ற இணையத்திலும் மேலும் 9003140739, 8287932122 தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு: நோட்டீஸ் அனுப்ப பதிவுத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.