தென்காசி: கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்காரணமாக, தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஷவர்மா கடைகளில் சோதனையிட்டுவருகின்றனர். அந்த வகையில், தென்காசி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சசிதீபா தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஷவர்மா கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து சசிதீபா கூறுகையில், "தென்காசி மாவட்டத்தில் சிக்கன் ஷவர்மா கடைகள் குறைவாகவே உள்ளன. அவர்களுக்கு சுகாதாரம், பாதுகாப்பு குறித்து கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சில கடைகளில் பழைய இறைச்சிகள் பறிமுதல் செய்யபட்டது. அவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதன்பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: ஷவர்மா விற்பனைக் கூடங்களுக்கு ரூ.20,000 அபராதம்; உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி