ETV Bharat / state

போர்வெல் உரிமையாளர்கள் 3 நாள் வேலை நிறுத்தம்... பின்னணி என்ன?

டீசல் மற்றும் போர்வெல் மூலப்பொருட்களின் விலை உயர்வால் போர்வெல் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக்கூறியும்; இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் போர்வெல் உரிமையாளர்கள் மூன்று நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போர்வெல் உரிமையாளர்கள் 3 நாள் வேலை நிறுத்தம்

author img

By

Published : Apr 2, 2022, 6:18 PM IST

தென்காசி: தமிழ்நாடு முழுவதும் போர்வெல் உரிமையாளர்கள் சங்கம் மூன்று நாள் வேலை நிறுத்தப் போராடத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தென்காசி போர்வெல் உரிமையாளர் சங்கத்தலைவர் சங்கர நாராயணன் கூறுகையில், "தென்காசி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் இயங்கி வருகின்றன. இந்த தொழிலை நம்பி 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் டீசல் மற்றும் போர்வெல் உதிரி பாகங்கள் விலையேற்றம் காரணமாக தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் அத்தியாவசியத்தில் ஒன்றான குடிநீர் மற்றும் விவசாயிகளின் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்து வருவதால், டீசல் மற்றும் மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு, பரிசீலனை செய்து வரி விலக்கு, சலுகைகள் செய்து தரவேண்டும்.

போர்வெல் உரிமையாளர்கள் 3 நாள் வேலை நிறுத்தம்

மேலும் டீசல் மற்றும் உதிரி பாகங்கள் விலையேற்றம் காரணமாக இனிவரும் காலங்களில் போர்வெல் அமைக்கும்போது அடி கணக்கில் மாற்றம் இருக்கக்கூடும். இதனை மக்கள் ஏற்றுக்கொண்டு தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர் தான்.. மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன - ஈபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.