ETV Bharat / state

கரோனா கட்டுப்பாட்டு அறை ஊழியருக்கு கரோனா!

author img

By

Published : Jun 18, 2020, 3:07 AM IST

தென்காசி: கரோனா கட்டுப்பாட்டு அறையில் சுகாதார ஊழியருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அந்த அறை மூடப்பட்டது.

corona control room
corona control room

தமிழ்நாட்டில் கரோனா நோய்க் கிருமித் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனைத் தடுக்கும் விதமாக பொதுமக்கள் முகக்கவசம் அணியவும், தகுந்த இடைவெளியை பின்பற்றவும் மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்திவருகின்றனர்.

இச்சூழலில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கரோனா கட்டுப்பாடு அறையிலுள்ள சுகாதார ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கட்டுப்பாட்டு அறையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூடப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுபடுத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் கடைகளின் நேரத்தைக் குறைத்து காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொற்று எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி மே 17ஆம் நிலவரப்படி தேதி தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 162 நபர்கள் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 96 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.