தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு அழகுநாட்சியாபுரம் கிராமத்தைs சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் மாரியம்மாள் வில்லிசை குழுவைக் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறார். தற்போது வேகமாகப் பரவி வரும் கரோனாவிலிருந்து மக்கள் எவ்வாறு கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்ற பாடலை இயற்றி, இசையமைத்து வில்லிசை மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் கைகளை எப்படி கழுவுவது, கட்டுப்பாடுடன் இருப்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரிகள் அமையப்பெற்ற இந்தப் பாடல் அப்பகுதி மக்கள் மத்தியிலும், சமூக வலைதளவாசிகள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - ரயில் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு