தென்காசி மாவட்டத்தில் கரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இருப்பினும் இன்னும் பல இடங்களில் கரோனா தாக்கம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் பொதுமக்கள் உள்ளனர். ஆகவே, அவர்களுக்கு பல்வேறு தன்னார்வலர்கள் மாவட்ட அலுவலர்களுடன் இணைந்து கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தாமாக முன்வந்து கரோனா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சாலையில் கரோனா வைரஸ் ஓவியங்களை வரைந்தனர். கீழப்பாவூர் பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞர்கள், சென்னை ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
தற்போது ஊரடங்கால் சொந்த ஊரில் வசித்து வரும் இவர்கள் மாவட்ட அலுவலர்களுடன் இணைந்து ஓவியங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இளைஞர்களின் இச்செயலானது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: கரோனா: மூடப்படும் தலைநகரின் எல்லைகள்!