ETV Bharat / state

பேருந்து படிக்கட்டு வழியே கீழே விழுந்த குழந்தை.. பதைபதைக்க வைக்கும் வீடியோ! - sankarankovil bus child fell down

சங்கரன்கோவில் அருகே சென்ற தனியார் பேருந்தில், ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததால், தாயின் கையில் இருந்த 2 வயது குழந்தை நிலைத்தடுமாறி பேருந்தின் படிக்கட்டு வழியே கீழே விழுந்த பதைபதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

பேருந்து படி வழியே கீழே விழுந்த குழந்தை
பேருந்து படி வழியே கீழே விழுந்த குழந்தை
author img

By

Published : Jan 22, 2023, 10:48 AM IST

பேருந்து படி வழியே கீழே விழுந்த குழந்தை

தென்காசி: சங்கரன்கோவில் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று அதிக பயணிகள் கூட்டத்துடன் சென்று கொண்டிருந்து. இந்நிலையில் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ காலணி பகுதியில் பேருந்து திடீரென திரும்பியபோது ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்தார்.

அப்போது பேருந்தில் பயணம் செய்த பெண்ணின் கையில் இருந்த 2 வயது குழந்தை நிலைதடுமாறி பேருந்தின் படிக்கட்டு வழியே கீழே விழுந்தது. அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த ஒருவர் இதை கண்டவுடன் ஓடிச்செற்று குழந்தையை தூக்கியதால் குழந்தை பேருந்துக்கு அடியில் சிக்காமல் காப்பாற்றப்பட்டது. இந்த விபத்தில் காயங்கள் ஏதும் இன்றி குழந்தை உயிர் தப்பியது.

இதனிடையே, பேருந்தில் இருந்து குழந்தை கீழே விழும் சிசிடிவி காட்சியானது தற்போது வெளியாகி காண்போரை பதைபதைக்க செய்துள்ளது. மேலும் தனியார் பேருந்துகள் நகரப் பகுதிகளில் இருக்கும் போது வேகத்தை குறைத்து செல்ல வேண்டும் எனவும் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மதுபோதையில் பஸ் ஸ்டாண்டில் பிரேக் டான்ஸ் - வைரலாகும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.