ETV Bharat / state

ஆலங்குளத்தில் கிணறு தோண்டும்போது வெடி விபத்து - பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கிணறு தோண்டும்போது வெடி வெடித்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆலங்குளத்தில் கிணறு தோண்டும்போது வெடி விபத்து - பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு!
ஆலங்குளத்தில் கிணறு தோண்டும்போது வெடி விபத்து - பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு!
author img

By

Published : Feb 16, 2023, 10:37 AM IST

Updated : Feb 16, 2023, 12:05 PM IST

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கிணறு தோண்டும்போது வெடி வெடித்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்

தென்காசி: ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடத்தை அடுத்த அய்யனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரிடம் அரவிந்த் (21) மற்றும் ஆசீர் உள்ளிட்ட 5 பேர் கிணறு வெட்டும் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் ஆலங்குளம் அருகே இருக்கும் ராம்நகர் - புதுப்பட்டி சாலையில் உள்ள காட்டுப் பகுதியில், புதுப்பட்டியைச் சேர்ந்த பால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த சில நாட்களாக கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று (பிப்.16) காலை வழக்கம்போல் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த பாறையை வெடி வைத்து தகர்க்க திட்டமிட்டுள்ளனர். இதன்படி பாறையை தகர்ப்பதற்காக டெட்டனேட்டர் வைத்து சோதனை செய்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக டெட்டனேட்டர் வெடித்துள்ளது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த அரவிந்த், சம்பவ இடத்திலேயே உடல் சிதறிய நிலையில் உயிரிழந்தார்.

மேலும் மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிணற்றின் மேல் பகுதியில் நின்று கொண்டிருந்த சக தொழிலாளிகள், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆலங்கும் காவல் ஆய்வாளர் மகேஷ்குமார் தலைமையிலான காவல் துறையினர், படுகாயம் அடைந்த ஆசீர் சாம்சன் உள்ளிடோரை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஆசீர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே விபத்தில் சிக்கிய மற்றொருவர் உயிரிழந்துள்ளார். இதனால் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம், இந்த திடீர் விபத்தால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.

இதையும் படிங்க: நெல்லையில் வழக்கறிஞருக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு!

Last Updated : Feb 16, 2023, 12:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.