இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தியாகத் திருநாள் எனும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்தநாளில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை செய்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது வழக்கம்.
இந்தாண்டு கரோனா ஊரடங்கு காரணமாக பொது இடங்களில் தொழுகை நடத்த அரசு தடை விதித்துள்ளது. அதனால் இஸ்லாமியர்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமனித இடைவெளியுடன் தொழுகை நடத்தினர்.
மேலும் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.
இதையும் படிங்க: 'தியாகங்களைச் செய்வோர் எல்லா காலத்திலும் போற்றப்படுவார்கள்' - டிடிவி தினகரன் பக்ரீத் வாழ்த்து