தென்காசி மாவட்ட சுற்றுவட்டார கரும்பு விவசாயிகளிடம் சர்க்கரை ஆலைகள் கரும்பை பெற்றுக் கொண்டு கோடிக்கணக்கான நிலுவைத் தொகையை இரண்டு வருடங்களாக வழங்காமல் ஏமாற்றி வருகிறது. இதனைக் கண்டித்து கரும்பு விவசாயிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று (அக.12) தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்புடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு கூறுகையில், "கரும்பு ஆலைகள் விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்து விட்டு இரண்டு வருடங்களாக தொகையை வழங்கவில்லை. மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எனக்கில்லை என்று கூறி வருகிறார்.
கரும்பு விவசாயிகளுக்கு உரிய நிலுவைத் தொகை கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும். அரசு தேர்தல் சமயத்தில் மட்டும் விவசாயிகளை நாட்டின் முதுகெலும்பு எனக் கூறி வருகிறது. தேர்தலுக்குப் பின்னர் அடிமைகளாக பார்க்கிறது" என குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: விவசாயிகளை அலைகழிக்கும் தரணி சக்கரை ஆலை - விவசாயிகள் போராட்டம்