தென்காசி: கடையம் ஒன்றியத்தின் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம், ஒன்றியக் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. மொத்தமுள்ள 17 கவுன்சிலர்களில் 15 கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது கடையம் அதிமுக கவுன்சிலர் தங்கம், ஜனதா உள்ளிட்ட அதிமுக கவுன்சிலர்கள், துணை சேர்மன் மகேஷ் மாயவனை (திமுக வடக்கு ஒன்றிய செயலாளர்) நோக்கி, 'எங்களைப் பொதுவெளியில் எவ்வாறு தகாத வார்த்தைகளால் பேசலாம்' எனவும்; கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக மற்ற கவுன்சிலர்களும், அவருடைய ஆதரவாளர்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறை உதவியுடன் துணை சேர்மன் பத்திரமாக வெளியேற்றப்பட்டார். மேலும் துணை சேர்மன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக கவுன்சிலர் தங்கம் என்பவர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்...