ETV Bharat / state

மின் இணைப்பு கொடுக்க சென்ற ஊழியரை அரிவாளால் தாக்கிய பெண்! - மின்சார ஊழியர் மீது தாக்குதல்

15 ஆண்டுகளாக இருளில் தவித்த மூதாட்டியின் வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்க சென்ற ஊழியர் மீது அரிவாள் வீசிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharat மின் ஊழியரை தாக்கிய பெண்
Etv Bharat மின் ஊழியரை தாக்கிய பெண்
author img

By

Published : Aug 10, 2023, 4:05 PM IST

மின் ஊழியரை தாக்கிய பெண்

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேவுள்ள செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவரது மனைவி பூபதி (74). முத்துக்குட்டி உயிரிழந்த நிலையில் மூதாட்டி பூபதி தனிமையில் வசித்து வருகிறார். வீட்டில் மின் இணைப்பு இல்லாததால் தன் வீட்டிற்கு உரிய மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என்று 74 வயதான மூதாட்டி பூபதி, மின் வாரியத்திடம் கடந்த சில மாதங்களுக்கு முன் மனு அளித்து இருக்கிறார்.

அவரின் மனுவை பரிசீலித்து பிறகு மின்வாரியத்துறை அதிகாரிகள் அவருக்கு மின் இணைப்பு கொடுக்க முன்வந்து உள்ளனர். இதற்காக அப்பகுதிக்குச் சென்ற மின்வாரிய அதிகாரிகளை பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பூபதி வீட்டிற்கு மின்சார இணைப்பு கொடுக்கக் கூடாது என்று மிரட்டி எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அக்கம்பக்கத்தினரின் மிரட்டலுக்கு பயந்து மின்வாரிய ஊழியர்களும் பூபதிக்கு மின் இணைப்பு கொடுக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.

மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பு கொடுக்க உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்ததன் அடிப்படையில் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று காவல் துறையினரும் உறுதியளித்து இருக்கின்றனர்.
அதன் அடிப்படையில் நேற்று (ஆக.09ஆம் தேதி) மாலையில் மின்வாரிய ஊழியர்கள், மூதாட்டி பூபதியின் வீட்டிற்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பு கொடுத்தார்.

அப்போது, அங்கு தொலைபேசியில் தனது உறவினர்களிடம் பேசியபடி கையில் அரிவாளுடன் வந்த கல்பனா என்ற பெண் தகாத வார்த்தைகளால் ஊழியர்களை திட்டியதுடன் மின் கம்பத்தில் இருந்த மின்வாரிய ஊழியரை நோக்கி அரிவாளை எறிந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தினார். கல்பனா வீசிய அரிவாள் வீச்சில் ஊழியர் நூலிழையில் தப்பினார். அவர் கீழே இறங்கியதும் கல்பனா அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

இது குறித்து விசாரித்த போது மூதாட்டிக்கு மின் இணைப்பு கொடுத்தால் அவர் வீட்டிற்குச் செல்லும் வயர் அருகில் உள்ள கல்பனா வீட்டின் வழியாக செல்லும் என்பதால் அவர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் இருளில் தவித்த மூதாட்டிக்கு தற்போது அதிகாரிகள் மின் இணைப்பு கொடுக்க முன்வந்து உள்ள நிலையில் பணியில் இருந்த அரசு ஊழியரை பெண் ஒருவர் அரிவாளை வீசி தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கடையநல்லூர் அருகே கிணற்றில் பிணமாக கிடந்த இளம்பெண்:போலீசார் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.