ETV Bharat / state

மனைவியின் தங்கை கர்ப்பம்: கணவர் மீது பாய்ந்தது போக்சோ!! - The Pocso Act

தென்காசி: விருந்துக்கு வந்த இடத்தில் மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய கணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசியில் போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது  தென்காசி  போக்சோ சட்டம்  Tenkasi  The Pocso Act  A Man Arrested in Pocso Act In thenkasi
The Pocso Act
author img

By

Published : May 18, 2020, 9:37 AM IST

தென்காசி மாவட்டம் புளிச்சி குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராஜ்(26). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், சுப்புராஜ் மனைவி தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதற்கிடையில், சுப்புராஜ் மனைவியின் 16 வயது தங்கை தனது அக்கா வீட்டில் தங்கியுள்ளார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் நீண்ட நாள்கள் அவரின் வீட்டிலே தங்கியுள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுப்புராஜ் தனது மனைவியின் தங்கையிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சுப்புராஜ் மனைவியின் தங்கை கர்ப்பம் அடைந்ததால் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விசாரித்தபோது தனது அக்கா கணவர்தான் இந்த நிலைக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சுப்புராஜ் மனைவியின் தங்கை அளித்த புகாரின் பேரில் தென்காசி மகளிர் காவல் துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க:தவறான தகவல்களுக்கு எதிரான புதிய பரப்புரையை தொடங்கியது வாட்ஸ்அப்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.